×

மாமல்லபுரம் பேரூராட்சியில் பக்கிங்காம் கால்வாயில் கொட்டிய குப்பைகள் அகற்றம்: பேரூராட்சி நிர்வாகம் அதிரடி

மாமல்லபுரம்: தினகரன் செய்தி எதிரொலியால் மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் அருகில் மர்ம நபர்கள் கொட்டிய குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக  அகற்றியது. மாமல்லபுரம் பேரூராட்சியில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ஓட்டல், ரெஸ்டாரண்ட், ரிசார்ட், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் ஏராளமானவை உள்ளன. மேலும், இங்குள்ள பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள முட்புதரில் மர்ம நபர்கள் கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, வாழைமரம், உணவு கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் லோடு ஆட்டோ, பைக் உள்ளிட்டவைகளில் கொண்டு வந்து கொட்டி விட்டு சென்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.  மேலும், இந்த பகுதியில் பன்றிகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து, குப்பை கழிவுகளை தின்று நகரம் முழுவதும் தெருக்கள் தோறும் பகல், இரவு நேரங்களில் ஜாலியாக சுற்றித்திரிந்து வந்தது. மேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தியும் வந்தது. இதில், வெறி பிடித்த பன்றிகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது மிகவும் அச்சுறுத்தியும் வந்தது. மேலும், தனியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளை துரத்தி, துரத்தி கடித்தது. குறிப்பாக, பன்றிக்கடியால் பாதிக்கப்படும் மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து, வீடு திரும்பிய நிகழ்வும் நடந்தது. எனவே, மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள முட்புதரில் மர்ம நபர்கள் கொட்டிவிட்டு ெசல்லும் குப்பை கழிவுகளை அகற்றி, அதனை கொண்டு வந்து கொட்டும் மர்ம நபர்களை பிடித்து காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் பேருராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், இது குறித்து கடந்த 9ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதையடுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து, பெக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை அதிரடியாக அகற்றி அப்பகுதியை சுத்தம் செய்தனர். மேலும், மீண்டும் அந்த பகுதியில் மர்ம நபர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டாமல் இருக்க, பெக்லைன் இயந்திரம் மூலம் அந்த இடத்தில் பள்ளம் தோண்டி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், செய்தி, வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.*மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள முட்புதரில் மர்ம நபர்கள் கொட்டிவிட்டு செல்லும் குப்பை கழிவுகளை அகற்றி, அதனை கொண்டு வந்து கொட்டும் மர்ம நபர்களை பிடித்து காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் பேருராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்….

The post மாமல்லபுரம் பேரூராட்சியில் பக்கிங்காம் கால்வாயில் கொட்டிய குப்பைகள் அகற்றம்: பேரூராட்சி நிர்வாகம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Buckingham Canal ,Mamallapuram Ranchi ,Municipality ,Mamallapuram ,Dinakaran ,Mamallapuram administration ,Empress Administration ,
× RELATED திடீர் தீ விபத்தில் 10 ஏக்கர்...